என்று தணியும் உங்கள் தாகம் ??? எத்தனை உயிர் தான் வேண்டும் ?? தன் நலம் காக்க பிறர் உயிரை பலி கொடுக்கும் அரசியல்வாதிகளே ….
தொடரும் சாதனைகள் நம் நாட்டு அரசியல் மேதாவிகளால்..
1. டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் ( பலி எண்ணிக்கை போதவில்லை போலும் பதவியில் உள்ளவர்களுக்கு)
2. விவசாயிகள் தற்கொலை ( சோறு உண்பது இல்லை போலும், நம் நாட்டை ஆள்பவர்கள் )
3. சாதி – ஆவணக் கொலைகள் (சாதி + அரசியல் வாதி = தீராத வியாதி )
4. நூறு நாட்களை கடந்த நெடுவாசல் போராட்டம் ( இருநூறு நாட்கள் ஆனாலும் வெளியில் வராது செய்திகள் )
5. நதி நீர் இணைப்பு (ஆதார் இணைப்பில் காட்டிய ஆர்வம் இங்கே கொஞ்சம் காட்டி இருக்கலாம் )
6. மது கடை மூடல் ( நெடுஞ்சாலைகளில் மூடி நெரிசல் மிக்க தெருக்களில் திறந்து சாதனை )
7. விவசாயிகள் போராட்டம் (டெல்லி சென்று போராடியும் தலைமையர் செவியில் விழவில்லை )
8. மணல் கொல்லைகள் ( நிறுத்த மனம் இல்லை நம் அரசாங்கத்துக்கு )
9. மீனவர் கொலைகள் ( மீட்பார் யாரும் இங்கு இல்லை )
10. நீட் தேர்வு (முதல் பலி அனிதா – இன்று 02-09-2017….அரசாங்கம் இன்னும் எதிர் பார்க்கிறது ??)
அம்மா புராணம் போதும் , ஐயா புராணம் போதும் …உங்கள் கட்சிகளை காக்க நீங்கள் எடுக்கும் முற்சிகளை கொஞ்சம் நாட்டை காக்கவும் எடுக்க இனியாவது சிந்தியுங்கள்..
விழித்து இருக்கிறோம் நாங்கள்..உங்கள் கேலி கூத்துகளை பார்த்து கொதித்து இருக்கிறோம்..
போராட துணிவு உண்டு எங்களிடம் ..ஆனால் போராடி வாழ்வு பெற நாங்கள் அந்நிய நாட்டில் இல்லை இது எங்கள் நாடு , என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ????